510. நான்காவது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்
திருமா ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரைப் போன்ற (ஈழத்தமிழர் பால்) உண்மையான அக்கறை உள்ள அரசியல்வாதிகள் தமிழகத்தில் மிக மிகச் சிலரே. ஆனால், ஏதாவது உருப்படியாக செய்யக்கூடிய சூழ்நிலையில் உள்ளவர்களே ஒன்றும் செய்யாமல் அமுக்கமாக இருக்கும்போது, திருமா இப்படி உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுதல் வேண்டாம். உண்ணாவிரதத்தை தற்போடது கைவிடுதலே நல்லது. திருமா தன் போராட்டத்தை வேறு விதங்களில் தொடரலாம். உண்மையான நோக்கத்தோடு நடைபெற்ற, குறிப்பிடத்தக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய போராட்டம் இது தான்! மற்ற போராட்டங்கள், பெரும்பாலும் தமாஷாக்கள் தான் என்பதை அனைவரும் அறிவர்.
************************************
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது.
கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.
இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார்.
அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோர் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழுக் கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடக்கிறது. இதில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.
உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
5 மறுமொழிகள்:
டெஸ்ட்
//திருமா தன் போராட்டத்தை வேறு விதங்களில் தொடரலாம். உண்மையான நோக்கத்தோடு நடைபெற்ற, குறிப்பிடத்தக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய போராட்டம் இது தான்!//
உண்மை.
ஒரு நாள் உண்ணாமை அடையாளம்.
இரு நாள் உண்ணாமை உடல் மாற்றம்.
மூன்றாம் நாள் உடல் அவதி.
நான்காம் நாள் திருமாவளவனின் கொள்கையின் உறுதி தெரிகிறது.
I still have haunted memories of our beloved Thileepan dying.
The indian govt is never going to listen to Thiruma and ask the srilankan govt to stop the war.It was India,the Ghandi's country which arrogantly let our Thileepan to die.
We don't want any harm to happen to Thiruma.
on behaif of eelam tamils, I ask him to stop his fasing.
By continuing it for 4 days ,he has already shown his determination and concern for eelam tamils.
If he continues it any further it might affect his physical health in the future and there might be damage to his internal organs.
We want him to have a healthy and long live .
அவரு நாடகத்தை முடித்து கூடாரத்தை கழட்டி விட்டு போய்டாருகோ.
1933இல் காந்தி தலித்துகளுக்கு ஆதரவாகவும் அவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை கண்டித்தும் 21 நாட்கள் உண்ணவிரதமிருந்தார். 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று அறிவித்துவிட்டுத்தான் செய்தார்.
இலங்கையில் தமிழர்கள் உணவின்றி, உடையின்றி, அவலத்துடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் குண்டுவீச்சுகளில் இறந்துகொண்டும் மரங்களுக்கு கீழும் பாம்புக்கடிகளில் இறந்துகொண்டும் இருக்கிறார்கள்.
இங்கே மூன்றுநாட்கள் கூட ஒரு தமிழகதலைவரால் பசி தாங்க முடியவில்லை.
Post a Comment